வந்தே பாரத்தில் முன்பதிவு தொடக்கம்.. ஆர்வமுடன் பதிவு செய்யும் பயணிகள்!!

 
வந்தே பாரத்

இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் சென்னை - மைசூரு, சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து   நெல்லை - சென்னை இடையேயான சேவை நாளை தொடங்க உள்ளது. இந்த   ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம்   தொடங்கி வைக்கிறார்.
இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நிறைவடைந்த நிலையில் தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது. இதற்கு ஏ.சி சொகுசு வகுப்பு கட்டணம், சேர் கார் கட்டணம் என 2 வகையான கட்டண முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உணவு, ஜிஎஸ்டி, முன்பதிவு என அனைத்தும் சேர்த்து, ஏ.சி சொகுசு வகுப்புக் கட்டணம் ரூ3,025  சேர் கார் கட்டணம் 1,620 ரூபாய்.
இந்த ரயில் விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை  ரயில் சேவை தொடங்கப்பட்டாலும் திங்கட்கிழமையில் இருந்துதான் முறைப்படி இந்த ரயில் இயக்கப்படுகிறது

வந்தே பாரத்


 மொத்தம் 8 பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயில்  சுமார் 652 கிலோ மீட்டர் தூரத்தை வந்தே பாரத் ரயில் 7 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு பகல் 1.50 மணிக்கு சென்னை சென்றடையும். இந்த ரயில் காலை 7.15 மணிக்கு விருதுநகர், 7.50 மணிக்கு மதுரை, 8.40 மணிக்கு திண்டுக்கல், 9.55 மணிக்கு திருச்சியை சென்றடைகிறது. மணிக்கு சுமார் 83.30 கி.மீ. வேகத்தில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

வந்தே பாரத்


 மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு 6.45 திருச்சி, 7.55 திண்டுக்கல், 8.45 மதுரை வழியாக இரவு 10.40 மணிக்கு மீண்டும் திருநெல்வேலியை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வாரத்தில் செவ்வாய் கிழமை மட்டும் பராமரிப்பு பணிகள் காரணமாக வந்தேபாரத் ரயில் இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் நேற்று காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து தொடங்க உள்ளது.  மறு மார்க்கத்தில் பகல் 2.50 மணிக்கு சென்னையில் இருந்து சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின் போது பயணிகள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்தில் ரயில் எல்லையை அடைகிறதா என்ற அடிப்படையில்  இந்த சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web