சென்னையில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்!

 
வந்தே பாரத்

 இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை கடற்கரை- காட்பாடி இடையே தொடங்கியது. சென்னை கடற்கரை - காட்பாடி இடையே 12 பெட்டிகள் கொண்ட "வந்தே மெட்ரோ" ரயில் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வந்தே பாரத்

சென்னை- திருப்பதி, சென்னை- காட்பாடி என 240 கி.மீ.க்குள் முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் சேவை தொடங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கி.மீ வேகம் வரை ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வந்தே பாரத்


12 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. இருக்கைகள், கண்காணிப்பு கேமரா, நவீன கழிவறைகளை கொண்டிருக்கும். ஒரு பெட்டியில் 104 பேர் அமர்ந்தும், 200 பேர் நின்று கொண்டும் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரயிலில் தானியங்கி கதவு, மொபைல் சார்ஜ், பசுமை கழிவறைகள், கேமரா ஆகியவற்றுடன் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!