யாரும் கவனிக்கப்படாமலேயே உயிரிழந்த பிரபல நடிகர்...ரசிகர்கள், பிரபலங்கள் இரங்கல்!

 
நியூமன்

வானிஷிங் பாயிண்ட் என்ற கல்ட் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படத்தின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றவர் பேரி நியூமன். இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக தனது 92வது வயதில் உயிரிழந்தார். இவரது மனைவி ஏஞ்சலா.

வானிஷிங் பாயிண்ட் திரைப்படத்தில் இவர் முன்னாள் ரேஸ் கார் டிரைவர் கோவால்ஸ்கியாக நடித்திருந்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 2007 முதல் நியூமன்   குரல்வளை புற்றுநோயால் கடும் அவதிப்பட்டு வந்த பேரி நியூமன் காலமானார். 

நியூமன்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர், திரைத்துறையில் இருந்து விலகினார்.   இந்நிலையில், நியூயார்க்-பிரஸ்பைடிரியன் கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவமனையில் மே 11ம் தேதி காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1970களில்  வெளியான அமெரிக்க அதிரடித் திரைப்படங்களில் ஒன்றான  வானிஷிங் பாயிண்ட்  8 வாரங்களில் படமாக்கப்பட்டது, மேலும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அதை தனக்குப் பிடித்தமான திரைப்படங்களில் ஒன்றாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நியூமன்

இது தவிர நியூமன் சில்வெஸ்டர் ஸ்டலோன் நடித்த டேலைட், போஃபிங்கர்  , ஸ்டீவன் சோடர்பெர்க்கின் தி லைமி மற்றும் 40 டேஸ் அண்ட் 40 நைட்ஸ் போன்ற படங்களிலும் நியூமன் நடித்துள்ளார். குரல் வளை புற்றுநோயிலிருந்து அவர் குணமடைந்த பிறகு 2022ல் அவர் ஃபைண்டிங் ஹன்னா என்ற சுயாதீன திரைப்படத்தில் நடிக்க எழுத்தாளர்-இயக்குனர் ஃப்யூரியுடன் மீண்டும் இணைந்தார் என தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் தெரிவித்துள்ளது.

இவர் இறந்து ஒரு  மாத காலத்துக்கு பின்னரே இவரது மறைவு திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் தெரிய வந்துள்ளது. ஒரு பிரபலம், யாராலும் கவனிக்கப்படாமல், காலமான செய்தி கூட வெளியே தெரியாமல் இருந்தது துரதிர்ஷ்டமானது என்று ஹாலிவுட் பத்திரிக்கைகள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இவரது மறைவிற்கு ரசிகர்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web