அரசு அலுவலகத்தில் மது அருந்தும் விஏஓ.... பகீர் வீடியோ...!

 
சேலம்

சேலம் மாவட்டம் ஓமலூர்  காடையாம்பட்டி தாலுக்காவில் பொட்டியபுரம்  கிராமத்தில்   கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி.   இவர் கிராம நிர்வாக அலுவலகத்தில், ஆவணங்கள் வைத்திருக்கும் பீரோவில் மது பாட்டில்களை வாங்கி வைத்து அதை குடிப்பதாக தொடர் புகார்கள் வந்தன.  விடுமுறை நாட்களிலும்  அலுவலகத்தைத் திறந்து வைத்து குடித்து வந்துள்ளார்.


அத்துடன் நில்லாமல்  அந்த வழியாக செல்லும் பொதுமக்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியும், ஏசியும், பேசியும் வந்தார். இவருடைய செயல்களை அப்பகுதியில் வசித்து வருபவர்கள் புகார் தெரிவித்தும் பயனில்லை.இதனையடுத்து அதனை மொபைலில் வீடியோவாக எடுத்து  சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சேலம்

இச்சம்பவம் குறித்து காடையாம்பட்டி வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்துப் பேசிய அந்த பகுதி மக்கள், "கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக மக்கள் வந்து செல்கின்றனர். கணவரால் கைவிடப்பட்டோர், கணவனை இழந்த பெண்களிடம்   வரம்பு மீறி  தகாத வார்த்தைகளில் பேசி வருகிறார்.   அவர் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கையும் விடுத்துள்ளார்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web