அதிர்ச்சி... விஏஓ ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!

ஈரோடு மாவட்டம் பவானி வெள்ளாளபாளையம் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் பவானி அருகே உள்ள ஒரிச்சேரி புதூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுகன்யா. குழந்தைகள் கிடையாது.. செந்தில்குமார் குடும்ப பிரச்சினை காரணமாகவும், கடன் தொல்லையாலும் கடந்த சில மாதங்களாக மிகுந்த மன அழுத்தத்துடன் இருந்தார். இதனால் வாழ்வில் வெறுப்புடன் இருந்து வந்தார். மனவேதனையுடன் காணப்பட்டார்.
வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தனது பெரியம்மாளின் மகளான ரம்யாவிடம் பேசினார். அதில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார். இதனால் பதற்றம் அடைந்த ரம்யா மீண்டும் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். ‘சுவிட்ச் ஆப்’ என்று வந்தது. அவர் ரம்யாவிடம் பேசும் போது ஈரோட்டில் இருந்து தொட்டிபாளையம் நோக்கி செல்லும் ரயில்வே தண்டவாள பகுதியில் செந்தில்குமார் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பு செந்தில்குமார் பாய்ந்தார். இதனால் ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்த செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் செந்தில்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!