விஏஓ கொலை வழக்கு... 2 பேருக்கு ஆயுள் தண்டணை!!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் ஏப்ரல் 25ம் தேதி கோவில்பத்து விஏஒ லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. தீர்ப்பின் படி குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்ற வாளிகள் ராமசுப்பு,மாரிமுத்து மூவருக்கும் ஆயுள் சிறை தண்டணை மற்றும் ரூ3000 அபராதம் விதித்து நீதிபதி செல்வம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து வெட்டியுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, ராமசுப்புவின் மீது லூர்து பிரான்சிஸ், கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், கடந்த வாரம் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், ஆத்திரம் அடைந்த ராமசுப்பு மற்றொரு நபரை அழைத்துக் கொண்டு அவரை வெட்டியதாகத் தெரிய வருகிறது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!