அடுத்த அதிர்ச்சி... பைக் முதல் டிரக் வரை வாகன வரி உயர்வு!!

 
வாகனம்

தமிழகத்தில் அனைத்துவிதமான வாகனங்களுக்கும் வாகன வரியை உயர்ட்தி பொது மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.  இது குறித்த மசோதா தமிழக சட்டப்பேரவையில்  தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 2012க்கு பிறகு  வாகனங்களுக்கான வரிகள் உயர்த்தப்படவில்லை.  தற்போதைய நிலவரப்படி  வாகனங்களுக்கு மிக குறைவான வரியே விதிக்கப்பட்டுள்ளது.  இதனால் அரசுக்கு குறைவான வருவாய்தான் கிடைப்பதாக கூறப்படுகிறது. மாநிலத்தின் நிதிவளத்தை உயர்த்துவதற்காக  நடைமுறையில் உள்ள வரிவிதிப்பு முறைகளை திருத்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  


அதன்படி, சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னிபேருந்துகள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய 2 சக்கர வாகனங்கள், ஆட்டோ உட்பட   3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான பேருந்துகள்,   கட்டுமானத்திற்கு பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், 'கேப்'கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கும் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.  அதன்படி புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி அதன் விலையில் 10 சதவீதம்; ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் எனில் வாகன வரி  12 சதவீதம் என நிர்ணயிக்கப்படுகிறது.
 பழைய மோட்டார் சைக்கிள்களுக்கு 
ஒரு ஆண்டு பழைய வாகனங்கள் ஒரு லட்சத்துக்கு உட்பட்டவை  - 8.25 சதவீதம் 
லட்சத்திற்கு மேல் 10.25 சதவீதம்
1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் பழையது-

வாகனம்
ஒரு லட்சத்திற்குள் - 8 சதவீதம்
ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல்-  10 சதவீதம் 
1 முதல் 11 ஆண்டுகளுக்கு மேலாக 
விலையில் 8 சதவீதம் முதல் 18.75 சதவீதம் வரை 
15 ஆண்டுகள் -5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750
மற்ற மோட்டார் வாகனங்களுக்கு ரூ.1,500 என நிர்ணயிக்கப்படுகிறது. 
புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி
மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.375
லகுரக வாகனங்களுக்கு ரூ.2,250
மற்ற வாகனங்களுக்கு ரூ.3000  

சரக்கு வாகனங்கள் 

3000   கிலோ எடை கொண்ட வாகனங்கள் - ரூ.3,600 
3000  கிலோ - 5,500 கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு காலாண்டு வரியாக ரூ.1,425, முதல் ரூ.3,100 வரை
வாடகை வாகனங்கள்,   பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள்,  சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஒப்பந்த வாகனங்கள் -
35 பேர்கள் பயணிக்கும்  வாகனத்திற்கு  காலாண்டு வரி ரூ.4,900
35 பேருக்கு  அதிகமானோர் பயணிக்கும் வாகனங்களுக்கு ரூ.3000
 படுக்கையுடன் கூடிய ஆம்னி பேருந்துகளுக்கு -ரூ3000-ரூ4000 வரை  வரி உயர்த்தப்படுகிறது.

வாகனவரி


 இழுவை வண்டிகளுக்கு- ரூ.500 முதல் ரூ.1,800 வரை வரி உயர்த்தப்படுகிறது. 
குறிப்பாக சென்னை மற்றும் மதுரை, கோவை நகர சுற்றுப் பகுதிகளில் பிரத்யேகமாக இயக்க அனுமதிக்கப்பட்ட பேருந்துகளுக்கு  மேல்வரி விதிக்கப்படுகிறது.  600 கிலோவுக்கு மிகாத, 50 சிசி உள்ள வாகனங்களுக்கு ஆண்டு வரி ரூ.135 முதல் ரூ.240 வரை . மற்ற வாகனங்களுக்கு அவற்றின் சி.சி.க்கு ஏற்ப ஆண்டு வரி விதிக்கப்படுகிறது. பயணிகள் போக்குவரத்து மற்றும் வாடகைக்கு பயன்படுத்தப்படும்  வாகனங்களுக்கு  5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6000 வரை  பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வரி உயர்த்தப்பட்டுள்ளது.  
கட்டுமான தளவாட வாகனங்களுக்கு ஆண்டு வரியாக ரூ. 15000 ; மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் போக்குவரத்திற்கான கல்வி நிறுவன பேருந்துகளுக்கு  7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.45; பணியாளர்களின் போக்குவரத்திற்கான பிற நிறுவனங்களின் வாகனங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.100 என்ற வீதத்தில் வரி நிர்ணயம் செய்யப்படுவதாக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web