ஆபத்தில் சிக்கிய மகள்.. . வெங்கடேஷ் பட் பரபரப்பு வீடியோ!!

 
வெங்கடேஷ்பட்

பிரபல சமையல் கலை வல்லுனர் வெங்கடேஷ் பட். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவில்  4 சீசன்களாக  நடுவராக கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.  இவர்  தனது குடும்பத்துடன் சென்னை ஃபீனிக்ஸ் மால் சென்றுள்ளார்.

அவர் தன் மகளுடன் எஸ்கலேட்டரில் பயணம் செய்யும் போது திடீரென அவர் மகளின் காலணி இழுக்கப்பட்ட்உ விட்டது.  அவரின் கால் உள்ளே செல்லும் அபாயம் ஏற்பட்டது.  அவர் உடனே ஷூவை கழற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.  ஆனாலும் அவரின் ஷூ பலத்த சேதம் அடைந்து உள்ளது.

வெங்கடேஷ் பட்

இச்சம்பவம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குழந்தைகளை கூட்டிக் கொண்டு எஸ்கலேட்டரில் செல்லும் போது மிகுந்த ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மாலில் நடந்தது. யாரையும் புண்படுத்தும் நோக்கத்திற்காக அல்ல . உயிர் பாதுகாப்புக்காக மட்டுமே இந்த பதிவு எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web