வாய் தகராறு.. மாமியாருக்கு காய் அறியும் கத்தியால் ஒரே போடு.. மருமகள் வெறிச்செயல்!
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த கரிவேடு பஜனைக் கோயிலைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (36). இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை பெரம்பலூரை சேர்ந்த ஜெகதீஸ்வரி (33) என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் சம்மதம் இல்லாமல் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், தனது கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மனைவி சந்தேகம் அடைந்தார். இதனால் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன், தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியை கடுமையாக தாக்கினார். இதுகுறித்து, ஆலூர் போலீசில் மனைவி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இப்போது அவர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை ஜெகதீஸ்வரிக்கும் அவரது மாமியார் கோலாபுரிக்கும் (63) வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஸ்வரி காய்கறி வெட்டும் கத்தியால் மாமியாரின் கழுத்து மற்றும் கைகளில் வெட்டினார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக கொளத்தூர் ஆலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸ்வரியை கைது செய்தனர். பின்னர் அவர் வாலாஜாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!