மூத்த பாஜக தலைவர் மாஸ்டர் மதன் காலமானார்.. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று அஞ்சலி!

 
மாஸ்டர் மதன்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி பாலாஜி கார்டனில் வசித்து வந்தவர் மாஸ்டர் மதன் (வயது 93). 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2 முறை எம்பியாக பதவி வகித்தார். சமீபகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு வீட்டில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இந்நிலையில் நேற்று இரவு 11.10 மணியளவில் வீட்டில் இருந்த மாஸ்டர் மதன் உயிரிழந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோவை பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இன்று காலை அவரது வீட்டுக்கு வந்தனர். அங்கு வைக்கப்பட்டுள்ள மாஸ்டர் மதன் உடலுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இவரது மறைவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web