மாஸ் வீடியோ... ட்ரெண்டிங்கில் ’வேட்டையன்’ மனசிலாயோ பாடல் !
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வேட்டையன்’. இந்த திரைப்படம் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கடந்த சில வாரங்களாக இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ’ பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோ செப்டம்பர் 8ம் தேதி முழு பாடல் நேற்று மாலை 5 மணிக்கு வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்க்கில் இருந்து வருகிறது. இந்த பாடல் ஏஐ மூலம் பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலில் உருவாகி உள்ளது.

இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலுக்காக மறைந்த பாடகர் பவதாரிணியின் குரலையும் ஏஐ உதவியுடன் பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் வெளியான 18 மணி நேரங்களில் 40 லட்சம் பார்வைகளை கடந்து யூடியூப் மியூசிக் டிரெண்டிங்கில் முதல் இடத்திலும் உள்ளது. மலையாளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அஜகஜந்திரம் என்ற படத்தில் வரும் ஓலுலேரு பாடலின் காப்பி எனவும், கேட்பதற்கு இரண்டு பாடல்களுமே ஒரே பீட்டில் வருவது போல தெரிவதாகவும் சினிமா பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
