பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி மரியாதை செலுத்தினார்!

 
தேவர் துணை ஜனாதிபதி

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா இன்று அரசு விழாவாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஆன்மிகமும், அரசியல் முக்கியத்துவமும் வாய்ந்த தேவர் ஜெயந்தி விழா நடைபெறும். இவ்வாண்டு விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக நிகழ்வாக தொடங்கியது. தொடர்ந்து நேற்று அரசியல் தலைவர்களின் பங்கேற்புடன் விழா நடைபெற்றது.

தேவர் ஜெயந்தி

இன்று அரசு விழாவாக நடந்த குருபூஜை நிகழ்வில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று, தேவர் நினைவாலயத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச். ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

தேவர் குருபூஜை

தேவர் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர். போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக செய்திருந்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?