கொண்டாட்டம் குறையாது... அஜீத் ரசிகர்கள் ’விடாமுயற்சி’ போஸ்டர்!!

 
விடாமுயற்சி

போட்டிக்கு போட்டி எதில் தான் என்பது கிடையாது. எம்ஜிஆர், சிவாஜி ரசிகர்கள் கமல் ரஜினி ரசிகர்கள் இடையே  எப்போதுமே ஒரு மோதல் போக்கு நீடித்து இருக்கும் . அதே போலவே விஜய், அஜீத் ரசிகர்கள்  இடையேயும் எப்போதும் போட்டா போட்டி , பதிலுக்கு பதில் தான் என்ற மோதல் போக்கு நீண்ட வருடங்களாகவே நீடித்து வருகிறது திரைக்கு பின்னால் விஜய்யும், அஜீத்தும் நல்ல நண்பர்கள். ஒருவரின் குடும்ப விழாவில் மற்றவர் கலந்து கொள்கிறார்கள். ரசிகர்கள் தான் போட்டி என்ற கோமாளித்தனத்தை முன்னெடுக்கின்றனர்.  இளையதளபதி  நடிகர் விஜய்யின் ‘லியோ’ படத்தின் டிரெய்லர் வெளியானது.

விடாமுயற்சி

இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அவருக்கு  வாழ்த்து தெரிவித்தும், அவரை அரசியலுக்கு வரச்சொல்லியும் மதுரை நகர் முழுவதும் நாளைய தலைவரே என்ற பாணியில் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர்.   நடிகர் விஜஉயை காமராஜர், எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களுடன்  ஒப்பிட்டு அவர்கள் அடித்திருந்த போஸ்டரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக அஜித் ரசிகர்களும் தற்போது  போஸ்டர் கலாச்சாரத்தில் குதித்துள்ளனர். தளபதி படம் வெளியாக இருக்கும் நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

விடாமுயற்சி

நீண்ட நாட்களாக இப்படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர்.  அஜித் ரசிகர்களுக்கு தற்போது படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அஜித்தின் ரசிகரான ரெட்.கே.பிரித்தன் என்பவர் RKP அஜித்குமார் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் கோவை மாநகரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ’அஜித் சார், உங்கள் வருகையும் சரி... எங்கள் கொண்டாட்டமும் சரி... சற்று தள்ளி போகலாம்! ஆனால் ஒரு போதும் குறையாது... விடாமுயற்சி வருக வெல்க...’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web