” திரும்பி வந்திடு தங்கம்... நீ இல்லாமல் வாழமுடியாது” விஜய் ஆண்டனி மனைவி கண்ணீர் ட்வீட்!!

 
மீரா

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா செப்டம்பர் 18 தேதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார் மன அழுத்தம் காரணமாக இந்த விபரீத முடிவு எடுத்ததாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதிகாலை 3 மணிக்கு   விஜய் ஆண்டனி படுக்கை அறையில் சென்று பார்த்த போது, அவர் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


 

இந்நிகழ்வு ஒட்டுமொத்த சினிமா உலகை அதிர வைத்த்து.  குடும்பத்தின் சோகம் இன்னும் தீரவில்லை. இந்நிலையில், மகளின் இழப்பு குறித்து நடிகர் விஜய் ஆண்டனியின் மனைவி தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

விஜய் ஆண்டனி

அதில் ” நீ எங்களோடு 16 வருடங்கள் மட்டுமே வாழ்வாய் என்று தெரிந்து இருந்தால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் உன்னைக் காட்டாமல், நான் உன்னை எனக்கு மிக அருகில் வைத்திருந்திருப்பேன். உன் எண்ணங்களில் மூழ்கி இறந்து போகிறேன், நீ இல்லாமல் வாழ முடியாது, அம்மாவிடம் திரும்பி வந்து விடு. லாரா உனக்காக காத்திருக்கிறாள், அன்பு தங்கம். ” என பதிவிட்டுள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web