தவெக கொடியை ஏற்றி பாடலை அறிமுகம் செய்த விஜய்!

 
தவெக
 "தமிழகத்தின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக் கொடியை கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கட்சி கொடிப் பாடலை வெளியிட்டு, கொடியை வியாழக்கிழமை ஏற்றி வைக்கிறோம். இன்று   முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும், தமிழகம் இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 9.15 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை நிலைய செயலகத்தில், கட்சியின் தலைவர் விஜய் தவெக கொடியை ஏற்றி வைத்தார். அத்துடன்  கட்சியின் பாடல்களையும் வெளியிட்டுள்ளார். நட்சத்திரங்கள் கொண்ட வட்டத்திற்குள் வாகை மலரும், இரு பக்கங்களில் போர் யானை படமும் இடம்பெற்றுள்ளன. கொடி சிவப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. இந்த கொடிக்கான அர்த்தம் மற்றும் கொள்கைகள் பின்னர் அறிவிக்கப்படும் என தவெக தலைவர்  விஜய் கூறியுள்ளார்.
 

தமிழகத்தில் இளையதளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஜய் சில மாதங்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். இந்நிலையில்  தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று ஆகஸ்ட் 22ம் தேதி  நடைபெற உள்ளது.  இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்தார்

தவெக


சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாக பங்கேற்றனர். விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டனர்.
 தவெக
நடிகர் விஜய் பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி என்.ஆனந்த் கட்சியை பதிவு செய்தார்.  2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என விஜய் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, கட்சியில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து நிலையிலான நிர்வாகிகளும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஆகஸ்ட் 19ம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மஞ்சள் நிறத்துடன் நடுவில் விஜய் படம் இருப்பது போன்ற கட்சிக் கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொண்டாட்டங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை