தமிழகம் முழுவதும் ”விஜய் நூலகம்” ... புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைப்பு!!

 
விஜய் நூலகம்

 
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில்  'விஜய் விலையில்லா மருந்தகம்', 'விஜய் விழியகம்', 'விஜய் பயிலரங்கம்'   பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. தற்போது அந்த வரிசையில் மக்கள் மாணவர்களிடையே வாசிப்பு திறனை ஊக்குவிக்க விஜய் நூலகம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி  செங்கல்பட்டு மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாம்பரத்தில் தொடங்கி வைத்தார். அதன் பின் பல்லாவரத்திலும் தொடங்கி வைத்தார். 

விஜய் நூலகம்


தாம்பரத்தில் 300 புத்தகங்கள், பல்லாவரத்தில் 200 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.  இதில் அரசியல் தலைவர்கள், பெரியார், காமராஜர், அம்பேத்கர், அன்னை தெரசா, அப்துல்கலாம், நேதாஜி பற்றிய புத்தகங்கள், போட்டித்தேர்வு, சட்டம், அகராதி, சிறுகதைகள், பாரதியார் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன, தினமும் காலை 9 மணி முதல் 4 மணி வரை திறந்திருக்கும். நூலகத்தில் தலைவர்கள் எழுதிய வாசகங்கள் எழுதப்படும்.  விஜய் எழுதிய "யாரோட அடையாளத்தையும் எடுத்துக்காதீங்க. உங்களுக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கோங்க." எனவும் பல நூலகங்களில் தாரக மந்திரமாக  ஒட்டப்பட்டுள்ளது.   இத்திட்டத்தின் கீழ்  அரியலூர் மாவட்டத்தில் 3500 புத்தகங்களும், நாமக்கல் மாவட்டத்தில் 900 புத்தகங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களில் தலா 325 புத்தகங்களும்  இடம் பெற்றுள்ளன.

விஜய் நூலகம்

இது தவிர சென்னை கிழக்கு வடசென்னை கிழக்கு, வட சென்னை வடக்கு வேலூர் மாவட்டம் என 11 இடங்களில் திறக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக  நவம்பர் 23ம் தேதி  வியாழக்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் 5 இடத்திலும், கோவையில் நான்கு இடத்திலும், ஈரோட்டில் மூன்று இடத்திலும், தென்காசியில் இரண்டு இடத்திலும், சேலம், புதுக்கோட்டை, கரூர். சிவகங்கை, திண்டுக்கல்,  கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களில் 21 இடங்களிலும்  நூலகம் திறக்கப்பட உள்ளதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். நூலகத்தில்  உறுப்பினராகி புத்தகங்களை வீட்டிற்கு  எடுத்து செல்லாம் அதற்கு கட்டணம் எதுவும் தேவையில்லை. புத்தகத்தை பத்திரமாக திருப்பி கொடுத்தாலே போதும் என தெரிவித்தார். தினசரி செய்தித்தாள்களும், வார மாத இதழ்களும்  வைக்கப்படும் மக்களின் தேவைக்கேற்ப புத்தகங்கள் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web