பூ தூவி வரவேற்பு... ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்... வைரலாகும் வீடியோ!

 
விஜய்

இளையதளபதி விஜய் நேற்று தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை புதிதாக தொடங்கியுள்ளார். கொடி சின்னம்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். விஜய் தற்போது ”கோட்” திரைப்படத்தின் படப்படிப்பில் புதுச்சேரியில் உள்ள ஏஏடி திடலில்  உள்ளார்.   படப்பிடிப்பு குறித்த தகவல்கள் பரவியதல் ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் புதுச்சேரி- கடலூர் சாலையில் குவிந்தனர்” 

புதிய அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் முதன் முறையாக மக்களையும், ரசிகர்களையும் சந்தித்துள்ளார்.  கோட் திரைப்படத்தின் படப்படிப்பு  குறித்த தகவல்கள் பரவியதல் ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் புதுச்சேரி- கடலூர் சாலையில் குவிந்துவிட்டனர். நடிகர் விஜய் வெளியே வரும்போது அங்கே குவிந்திருந்த ரசிர்கள் மாலையையும், மலர்களையும் வீசி எறிந்தனர். கீழே விழுந்த மாலையை தனது கழுத்தில் போட்டுக் கொண்ட விஜய் அந்த மாலையை ரசிகர்களுக்கும் தூக்கி போட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. 


இது குறித்து விஜய் வெளியிட்ட அறிக்கையில்  ‘“விஜய் மக்கள் இயக்கம்" பல வருடங்களாக   பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருகிறது.   முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர, ஒரு தன்னார்வ அமைப்பு மட்டுமே போதாது.   அதற்கு அரசியல் அதிகாரம் தேவையானதாக இருக்கிறது.   ஒரு புறம்  "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" மற்றொரு  புறம்   சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" என   இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.

ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கு வழிகாட்டும் வகையில் இந்த கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.   இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, “ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" பிறப்பால் அனைவரும் சமம் என்கிற சமத்துவ கொள்கையை   உடையதாகவும் இருக்க வேண்டும்.  

இந்நிலையில், என்னுடைய தாய், தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழக  மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால கனவு, எண்ணம் மற்றும் விருப்பமாக உள்ளது.  

"எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி தொடங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில்   விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

 

விஜய்
ஜனவரி 25ம் தேதி  சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள்  முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.     நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபடுவேன்.  அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்.” என தெரிவித்து இருந்தார்.’

தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு   நன்றி தெரிவித்து நடிகர் விஜய் இன்றைய தினம் ட்வீட் செய்து இருந்தார். அதில், “தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்.” என தெரிவித்து இருந்தார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web