விஜய் சேதுபதி மகன் கதாநாயகனாகிறான்.. படப்பிடிப்பு தொடக்கம்..!

 
விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவின்  முண்ணனி நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. இவர்  ஒரே சமயத்தில் கதாநாயகன், வில்லன், குணசித்திர நடிகர், சிறப்பு தோற்றம் என பல கதாபாத்திரங்களிலும்  தோன்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.  இவரது நடிப்புத் திறமையை மற்றமொழி சினிமாக்காரர்களும், ரசிகர்களும் கூட கொண்டாடி வருகின்றனர்.  இவர் தன்னுடைய எளிமையான நடவடிக்கையால் தொடர்ந்து கவனம் ஈர்த்தும் வருகிறார்.


 

இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இவர் ஏற்கனவே நானும் ரவுடிதான், சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். மேலும் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் 2ம் பாகத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் படத்திற்கு ‘பீனிக்ஸ் வீழான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.


விஜய் சேதுபதி
 

சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டுள்ளது.  பிரேவ் மேன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ராஜலட்சுமி அரசகுமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பூஜை சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

From around the web