கரூர் பிரச்சார கூட்டத்தில் பலியான 20 குடும்பத்தினரிடம் வீடியோகாலில் பேசிய விஜய்?
கரூர் மாவட்டத்தில் செப்டம்பர் 27 ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருடன் விஜய் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறினார். இந்த வீடியோ கால்கள் அக்டோபர் 6 ம் தேதி மாலை மற்றும் இரவு நேரங்களில் நடைபெற்றன. விஜய், பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தைப் புரிந்து கொண்டு, தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த இளைஞர் தனுஷ்குமாரின் அம்மா மற்றும் தங்கை ஹர்ஷினியுடன் விஜய் சுமார் 20 நிமிடங்கள் வீடியோ கால் செய்துள்ளார். அவரது தாயிடம், “நடக்கக்கூடாத நிகழ்வு நடந்துவிட்டது. எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு” எனக் கூறி ஆறுதல் தெரிவித்துள்ளார். தங்கை ஹர்ஷினியிடம், “அண்ணன் ஸ்தானத்தில் எப்போதும் இருப்பேன். எல்லா உதவிகளும் செய்வேன்” என உறுதி அளித்துள்ளார். இந்தப் பேச்சின்போது விஜய் அதிக நேரம் மௌனமாக இருந்ததாக தெரிகிறது எனவும் சமூக வலைதளங்கள் மூலம் மற்றொரு குடும்பமாக, ஏமூர் புதூரைச் சேர்ந்த சக்திவேலின் மனைவி பிரியதர்ஷினி மற்றும் மகள் தரணிகா உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில், அவரது குடும்பத்தினருடனும் விஜய் வீடியோ கால் செய்துள்ளார். “இது ஈடு செய்ய முடியாத இழப்பு. நான் மிகவும் வருந்துகிறேன். தவெக தேவையான உதவிகளைச் செய்யும்” எனக் கூறியுள்ளார். அவர்களிடமும் விரைவில் நேரில் சந்திக்கும் என உறுதி அளித்தார்.இந்த வீடியோ கால்கள் ஒவ்வொன்றிலும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீடித்தன. வீடியோ கால்களின்போது, புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எடுக்க வேண்டாம் என விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 20 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். தவெக நிர்வாகிகள், உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்துடனும் விஜய் வீடியோ கால் செய்வார் மற்றும் விரைவில் நேரில் சந்திப்பார் எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
