அக்டோபர் 13ம் தேதி கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தை விஜய் சந்திப்பு?

 
கரூர் விஜய்
 

கரூரில் செப்டம்பர் 27ம் தேதி நடந்த தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தவெக தலைவர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். தற்போது, அந்த குடும்பங்களை அக்டோபர் 13ம் தேதி நேரில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூர்

நெரிசல் சம்பவம் நடைபெற்ற பிறகு விஜய் வீடியோ செய்தி மூலம் ஆறுதல் தெரிவித்திருந்தார்.  அவர் அப்போதே இடத்தைவிட்டு வெளியேறியது விமர்சனங்களை ஏற்படுத்தியது. பின்னர், கட்சியின் கொள்கைப் பிரச்சாரச் செயலாளர் அருண்ராஜை நேரில் அனுப்பி பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார்.  விஜய் விரைவில் கரூருக்கு வருவதாகவும், டிஜிபிக்கு அனுமதி கோரிக்கை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

கரூர்

இதற்கான ஏற்பாடாக, கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி அரங்குகளில் ஒன்றை தவெக சார்பில் கேட்டுள்ளதாகவும், விஜய்க்கு கட்சி சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம், விஜய் கரூருக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?