விஜய் டிவி பிரபலம் திருமண புகைப்படங்கள், வீடியோ!!

 
நாஞ்சில் விஜயன்

 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு  என பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர்  மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர்.  தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக வலம் வருகிறார்.  இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்வேடமிட்டு கலக்கி வருகிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.   விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சில படங்களில் நடித்தும் வருகிறார்.  


இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான வள்ளி திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் காமெடி நிகழ்ச்சியிலும் நாஞ்சில் விஜயன் பங்கேற்று வருகிறார். வத்திக்குச்சி என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நாஞ்சில் விஜயன் நடித்து வருகிறார். இதன் மூலம் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது.

நாஞ்சில் விஜயன்
 ஜூலை மாதம் நாஞ்சில் விஜயன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்  அருகில் நின்றிருந்த மணப்பெண்ணின் முகத்தை காட்டாமல் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார்.
இன்று செப்டம்பர் 4ம் தேதி நாஞ்சில் விஜயனுக்கும் மரியாவுக்கும்  திருமணம் நடைபெற்றது. இவரது திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் மிக எளிமையாக நடைபெற்றது. இவரது திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள்  கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web