விஜய் கேமரா முன்னால் மட்டுமே நடிப்பார்.. மக்கள் முன்னாடி கிடையாது... விஜய்க்கு ஆதரவாக ‘திருப்பாச்சி’ நடிகை பேட்டி!

 
மல்லிகா திருப்பாச்சி விஜய்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக தரப்பில் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய்க்கு ஆதரவாக, ‘திருப்பாச்சி’ படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த நடிகை மல்லிகா தனது கருத்தை பதிவிட்டுள்ளார். சமூக வலைதள வீடியோவின் மூலம் பேசிய அவர், “இன்ஸ்டாகிராமில் விஜய் சார் பற்றி நிறைய வீடியோக்கள் வருகிறது. அவருக்கு பலரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். நானும் என் அனுபவத்தை பகிர வேண்டும் என்று நினைத்தேன்.

கரூர் விஜய்

படப்பிடிப்பின் போது அவர் மிக அமைதியாக இருப்பார். ஆனால் இப்போது கட்சி தொடங்கி மக்களிடம் பேசும் விதத்தில் அவரில் பெரிய மாற்றம் தெரிகிறது. அதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. விஜய் சார் கேமரா முன்னாடி மட்டும் நடிப்பார். மக்கள் முன்னாடி நடிப்பதில்லை. நல்லது செய்ய வரும் போது சில தவறான சூழல்கள் நடக்கலாம். ஆனால் கடைசியில் அவர் தான் ஜெயிப்பார்,” என தெரிவித்துள்ளார். மேலும், “கூட்டங்களில் சதி செய்ய சிலர் வரலாம். அண்ணன் கொஞ்சம் உஷாரா இருக்கணும்” என்று விஜய்க்கு எச்சரிக்கை கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?