விஜய் கரூர் செல்ல அனுமதி கோரி டிஜிபிக்கு கடிதம் ... த.வெ.க. அறிவிப்பு!
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களை நேரில் சந்திக்க த.வெ.க. தலைவர் விஜய், தமிழ்நாடு டிஜிபிக்கு (DGP) அனுமதி கோரியுள்ளதை கட்சித் தரப்பினர் அறிவித்துள்ளனர்.
செப்டம்பர் 27ம் தேதி, கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரச்சார நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட அதிர்ச்சிகர கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தையடுத்து த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகி நிர்மல் குமார் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ₹10 லட்சம் வழங்கும் அறிவிப்பும், த.வெ.க. சார்பில் ₹20 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
சமீபத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் வீடியோ கால் மூலம் நேரடியாக தொடர்புகொண்டு ஆறுதல் கூறியிருந்தார். இந்நிலையில், அவர் நேரில் கரூருக்கு செல்லுவதற்கான அனுமதியை போலீசார் தரவில்லை என்பதே த.வெ.க. தரப்பின் வாதம்.

டிஜிபிக்கு அனுப்பப்பட்ட கடிதம்
த.வெ.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ்
"விஜய் அவர்கள், கூட்ட நெரிசலில் உயிரிழந்த 33 குடும்பங்களை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியுள்ளார். அவரே நேரில் கரூருக்குச் சென்று சந்திக்க விரும்புகிறார். இதற்கான அனுமதியை பெறும் நோக்கத்தில், டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளோம். இன்று நேரிலும்சென்று அனுமதி கோர உள்ளோம்." இதற்கான முடிவு எப்போது வெளியாகும் என்பது தற்போது வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
