ஐசியூவில் விஜயகாந்த்... மருத்துவமனை அறிக்கை என்ன சொல்லுது?...!!
தமிழ் திரையுலகின் முண்ணனி நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். இவர் தேமுதிக கட்சியில் தலைவரும் ஆவார். நடிகர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு கடும் அவதிப்பட்டு வருகிறார். அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த தீபாவளி பண்டிகை தினத்தில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இதனை பார்த்த அவரது ரசிகர்கள், தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். எப்படி இருந்த தலைவர் இப்படி உடல் மெலிஞ்சு போயிட்டாரே... என்னதான் ஆச்சு இவருக்கு என கண்கலங்கினர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக நடிகர் விஜயகாந்த்துக்கு இருமல், சளி மற்றும் தொண்டை வலி காரணமாக அவதிப்பட்டார். இதனையடுத்து நவம்பர் 18ம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேவையற்ற வதந்திகள் பரவி வருகின்றன. இதையடுத்து, தேமுதிக கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் "தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றுள்ளார்.
அவர் நலமாக இருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" என கூறப்பட்டிருந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் “ விஜயகாந்துக்கு ஏற்கனவே உடல்நிலை பாதிப்பு இருப்பதால் உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிப்பதற்காக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு உயர்தர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் தாமாகவே சுவாசித்து வருகிறார். அவரது உடல் நிலையை சீராக உள்ளது “ என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!