விஜயகுமார் மரணம் ... அரசியல்வாதிகள் அலறல்... காவல்துறையினருக்கு சங்கம் வலுக்கும் கோரிக்கை?

 
டிஜிபி

தமிழகத்தை பொறுத்த வரையில் சட்டம் எப்பொழுதும் தூங்கி வழியும் ஆனால் ஏதாவது நடக்கக்கூடாத ஏடாகூட சம்பவம் நடந்துவிட்டால் விழித்து எழும் இதுதான் வாடிக்கை , திருச்சி ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் 2004ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது கிட்டத்தட்ட 60 உயிர்களை கபளீகரம் செய்தான் தீ என்னும் அரக்கன், அரசு இயந்திரம் விழுத்துக்கொண்டு அனைத்து திருமண மண்டபங்களிலும் சோதனை நடத்தி சாதனை படைத்தது அதன்பின்னர் அதே ஆண்டு கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் இளம் பிச்சுகள் கிட்டத்தட்ட 99பேர் வரை தீக்கிரையானார்கள் அப்பொழுதும் அரசு இயந்திரம் முடிக்கிவிடப்பட்டது அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்யப்பட்டது அத்தோடு சரி இப்பொழுது அப்படி ஒரு சம்பவம் காவல்துறையில் நடக்க அரசியல்வாதிகள் கதறித்துடிக்க ஆரம்பித்து விட்டனர்.

தமிழக காவல்துறையில் திறமையாக பணியாற்றிய டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட தகவலால் மீண்டும் சங்க கோரிக்கை வலுப்பெற ஆரம்பித்து உள்ளது ஆனால் அரசு செவிசாய்க்குமா என்பது வேறு விஷயம்.

திருமா

இது குறித்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பட்டாசை பற்ற வைத்திருக்கிறார் விஜயகுமார் மரணம் மிகவும் அதிர்ச்சி அளித்தது. இதற்கு பணிச் சுமையோ, குடும்ப பிரச்னையோ காரணமில்லை என்றும் மன அழுத்தம் மட்டுமே காரணம் என்று போலீசார் கூறியுள்ளனர். எனவே, அவருடைய மன அழுத்தத்துக்கு என்ன காரணம் என்று கண்டறிய வேண்டும். போலீசார் விடுப்பே இல்லாமல் பணி புரிகின்றனர். அவர்களுக்கு அரசியல் அழுத்தமும், அதிக காலி பணியிடங்களால் பணிச்சுமையும் இருந்து வருகின்றன.

எல்லாதுறையினருக்கும் சங்கம் இருக்கும் போது, போலீசாருக்கு மட்டும் சங்கம் வைக்க அனுமதி அளிக்கப்பட வில்லை. சங்கம் அமைக்க அனுமதி வேண்டும் என போலீசார் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். போலீசார் எதிர் கொள்ளும் பிரச்னைகளுக்கு தனித்தனியாக கோரிக்கை வைப்பதைவிட, சங்கம் மூலம் கோரிக்கை வைப்பது பலன் தரும். எனவே, அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று, சங்கம் அல்லது அமைப்பு வைத்துக் கொள்ள அனுமதிப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை கூறியிருக்கிறார்.

ஸ்டாலின்

அரசு ஊழியர்கள் போல் போலீசார் நடத்தப்படுவதில்லை. சங்கம் வைக்க போலீசாருக்கு உரிமை வழங்கப்படவில்லை. பல நெருக்கடிகளுக்கு போலீசார் ஆளாகின்றனர் எனவே, போலீசாருக்கு எட்டு மணி நேர பணி நிர்ணயிக்க வேண்டும். அரசுத்துறை அதிகாரிகள் போலவே போலீஸ் அதிகாரிகளையும் நடத்த வேண்டும் என்று டிஐஜி விஜயகுமாரின் மரணம் உணர்த்துகிறது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். என்று திருமாவளவன் கூறினார்.

இந்த கோரிக்கை காவல்துறையினர் மத்தியில் நீண்ட காலமாகவே இருந்து வரும் சூழ்நிலையில் இப்பொழுது அரசியல் கட்சியினர் குரல் கொடுத்திருப்பது ஆறுதலை அளிப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் ஆகவே அரசு உரிய சட்டபூர்வ நடவடிக்கையை எடுக்குமா அல்லது எப்பொழதும் போல மெத்தனம் காட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்கிறார் சமூக ஆர்வலர்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web