காங்கிரசிலிருந்து பாஜகவுக்கு தாவிய விஜயதரணி எம்.எல்.ஏ. !

 
விஜயதரணி

இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. கூட்டணி கட்சிகள் தொகுதிப் பங்கீடு, பிரச்சார வியூகம் என அனைத்து அரசியல் கட்சிகளும் களம் காணத் தயாராகி வருகின்றன.  இந்தியா முழுவதும் மாவட்ட மாநில தேசிய அளவில் பல்வேறு அரசியல் நகர்வுகள் இந்திய அரசியலில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு முக்கிய தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள்  கட்சித் தாவலில் ஈடுபட்டு வருகின்றனர்.  


 


அந்த வரிசையில் கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ்  கட்சி எம்.எல்.ஏ .  கட்சியில் இருந்து விலகியே இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது அவர் காங்கிரசிலிருந்து விலகி   பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 2011, 2016 மற்றும் 2021 என  தொடர்ச்சியாக 3 முறை  வென்று சாதனை படைத்தவர் விஜயதாரணி.இன்று டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்  பாஜக தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த பின்னர் ” குழந்தை பருவம் முதல் நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்தேன்.   தற்போது அங்கு நிலவி வரும் கடினமான சூழல் காரணமாக நான் விலகி விட்டேன்.

விஜயதரணி

 பிரதமர்  மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பல்வேறு நன்மைகள் மக்களுக்கு கிடைத்து வருகிறது. பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக பாஜக உள்ளது. பாஜக ஆட்சி மக்களை நல்வழிப்படுத்த உதவி வருகிறது. பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு பயனளித்து வருகின்றன” என  விஜயதாரணி பேட்டி அளித்தார்தமிழக காங்கிரஸ் தலைமை இது குறித்து  “விஜயதரணி  காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.   மேலும் , கட்சி தாவல் நடவடிக்கை அவர் மீது பாயும் ” என  தலைமையில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web