அதிரடி.. விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம் !!

 
விநாயகர்

இந்தியா முழுவதும் விநாகர் சதுர்த்தி ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று  விநாயகர் சதுர்த்தி . நடப்பாண்டில்  விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்திய முன்னிட்டு விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு  ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

விநாயகர்

நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி மும்மூரமாக நடைபெற்று வருகிறது.   இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறை  தமிழக அரசு செப்டம்பர் 17ம் தேதி அறிவித்திருந்தது.  தற்போது அதனை மாற்றி செப்டம்பர் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி என அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் "செப்டம்பர் 17, 2023 தேதியை விநாயகர் சதுர்த்திக்கான பொது விடுமுறை நாளாக 1881 ம் ஆண்டு பேச்சுவார்த்தையின் கீழ் அறிவிக்கப்பட்டு இருந்தது.

விநாயகர்

ஆனால் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், பல்வேறு கோயில் தலைவர்களின் அறிக்கையின்படி, "விநாயகர் சதுர்த்தி 17.09.2023 (ஞாயிற்றுக்கிழமை)க்குப் பதிலாக 18.09.2023 (திங்கட்கிழமை) அனுசரிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.  இதை பரிசீலித்த அரசு, 1881, பேச்சுவார்த்தைக்குட்பட்ட சட்டத்தின் கீழ், 17.09.2023 (ஞாயிற்றுக்கிழமை) முதல் 18.09.2023 (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது விடுமுறையை மாற்ற முடிவு செய்துள்ளது. அதன்படி, பின்வரும் அறிவிப்பு 01.09.2023 தேதி கூடுதல் அரசாணையில் வெளியிடப்படும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web