வங்கதேசத்தில் வன்முறை: இந்தியா்களுக்கு தூதரகம் அவசர செய்தி!

 
வங்கதேசம்
 

 


வங்கதேசத்தில் இடஒதுக்கீடு முறைக்கு எதிரான மாணவா்கள் போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கதேசத்தில் உள்ள இந்தியா்கள், வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிா்க்குமாறு இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டது.வங்கதேசத்தில் ஒவ்வொரு வருடமும் சுமாா் 3000 அரசுப் பணியிடங்களுக்கு 4,00,000 பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனா்.

விடுதலை நாள் விழாவில் பங்கேற்க வங்கதேசம் சென்ற இந்திய குடியரசு தலைவர்!

இதில், 1971ம் ஆண்டு விடுதலைப் போரில் பங்கேற்ற வீரா்களின் வம்சாவழியினருக்கு 30 சதவீதமும், பின்தங்கிய மாவட்டங்களுக்கும், பெண்களுக்கும் தலா 10 சதவீதமும், சிறுபான்மை இனத்தவருக்கு 5 சதவீதமும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நாட்டின் உயா்நிலை அரசு பணிகளுக்கு தகுதியுள்ள மாணவா்கள் பணியமா்த்தப்படுவதை தற்போதுள்ள இந்த இடஒதுக்கீட்டு முறை தடுப்பதாகவும், இடஒதுக்கீட்டில் சீா்திருத்தங்கள் கோரியும் மாணவா்கள் நடத்தி வந்த நாடு தழுவிய போராட்டத்தில் திங்கள்கிழமை வன்முறை வெடித்தது.
அமைதியாக நடத்தப்பட்ட போராட்டத்தின் மீது நாட்டில் ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவா் அணி காவல்துறை உதவியுடன் தாக்குதல் நடத்தியதாக அவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து வெடித்த வன்முறையில் இதுவரை 6 போ் உயிரிழந்தனா். நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கைலைகழகங்கள் காலவரையின்றி மூடப்பட்டன.

 

விடுதலை நாள் விழாவில் பங்கேற்க வங்கதேசம் சென்ற இந்திய குடியரசு தலைவர்!
இந்நிலையில், டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாட்டில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, வங்கதேசத்தில் உள்ள இந்திய சமூகத்தினா் மற்றும் மாணவா்கள் தங்கள் வளாகத்தை விட்டு வெளியே செல்வதைக் குறைக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிா்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web