வைரலாகும் வீடியோ... விவாகரத்து கிடைச்ச மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட பிரபல பாலிவுட் நடிகை!

 
ராக்கி சவாந்த்

நம்ம ஊரு கலாசாரம் தான் இந்தி திரையுலகிலும் கொடிக்கட்டி பறக்கிறது. இது ஏஐ உலகம். பொறந்தாலும் குவார்ட்டரைக் கொடுத்து ட்ரீட் வை... செத்தாலும் துக்கத்துக்கு டாஸ்மாக் பார்ல வா கட்டிங் போடலாம் என்கிற நெனைப்பு ஆம்பளைகளுக்கு மட்டுமே என்று மல்லுக்கட்டி நிற்கிற பெண்கள்,  முன்பெல்லாம் யாரும் அறியாமல் தன்னந்தனியே கொண்டாடித் தீர்த்தார்கள். இந்த சோஷியல் மீடியாக்களின் லைக்ஸ்களை அள்ளுகிற காலம்.

விவாகரத்து கெடைச்ச குஷியில குத்தாட்டம் போட்டு, அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் பிரபல பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

பாலிவுட் சினிமாவின் ட்ராமா குயின் ராக்கி சாவந்த் போஸ்டர்களுக்காகவே கல்லா கட்டிய இந்தி படங்கள் லிஸ்ட் பெருசு. சேச்சிகளின் தேசத்தில் இருந்து ஷகீலாவை அழைச்சுக்கிட்டு வந்து நாம ரசிக்கிற மனசு மாதிரியே இங்கே இருக்கிற பெரிய பெரிய தமிழ் ஸ்டார்கள் எல்லாம், ஒரு பாட்டுக்கு ராக்கி சாவந்த் வர்றாக என்று கால்ஷீட் டைரியை நிரப்பி  இருக்கிற வரலாறு தமிழ் சினிமாவுக்கு உண்டு. இந்த ராக்கி சாவந்த், 2006ல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், திரையுலகில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தார்.

நடிப்பு, நடனம், மாடலிங் என்று இவரது பயணம் சென்று கொண்டிருக்க, அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் அவர் சிக்குவது வழக்கம். தமிழில் ‘என் சகியே’, ‘முத்திரை’, ‘கம்பீரம்’ உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருக்கிறார். கடந்த 2019ல் தொழிலதிபர் ரித்தேஷ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த திருமணத்தை முறித்துக் கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆதில் துரானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன் ஆதில் துரானிக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

ராக்கி சாவந்த் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் ஆதில் துரானி கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். ஆதிலுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பிய ராக்கி சாவந்த், அவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார். தற்போது அவருக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Rakhi-sawant

விவாகரத்து கிடைத்த குஷியில், நடிகை ராக்கி சாவந்த் பிரேக் அப் பார்ட்டி ஒன்றை கொண்டாடி உள்ளார். அதில் விவாரத்து கிடைத்ததால் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறி குத்தாட்டமும் போட்டுள்ளார். அவர் பிரேக் அப் பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web