காஞ்சிப்பட்டு சரசரக்க விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய விராட்கோலி, அனுஷ்கா சர்மா !! வைரலாகும் புகைப்படங்கள்!!

 
விராட் கோலி அனுஷ்கா சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மா . இருவரும் கொண்டாடிய விநாயக சதுர்த்தி பூஜைகள் கொண்டாட்டங்கள் வைரலாகி வருகின்றன.  இந்தியாவின் நட்சத்திர ஜோடிகளில் ஒருவர்  விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா.இவர்கள்  விநாயக சதுர்த்தியை தனித்துவமான   முறையில் கொண்டாடினர்.


 

இது குறித்த புகைப்படங்கள் , வீடியோக்கள் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.  விராட்கோலி ஆசிய கோப்பை 2023 பட்டத்தை வென்ற பிறகு சமீபத்தில் இந்தியா திரும்பிய கணவருடன்  வீட்டில் விநாயக சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டங்களின் படங்களை பதிவிட்டு  நடிகை அனுஷ்கா ஷர்மா இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்கு ‘விநாயக சதுர்த்தி’ வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

பிள்ளையார்


 முதலில் அனுஷ்கா விநாயகர் சிலையின் படத்தைப் பதிவிட்டு,  2வதாக,  கணவர் விராட் கோலியுடன் இருக்கும் படத்தையும் பதிவிட்டுள்ளார்.  இந்த படத்தில் அனுஷ்கா அழகான தங்க மற்றும் சிவப்பு நிற காஞ்சிபுரம் சேலையில் தன்னை அலங்கரித்துள்ளார்.   விராட் கோலி வெள்ளை அச்சிடப்பட்ட குர்தா மற்றும் பைஜாமாவில் அழகாக தோற்றமளிக்கிறார். 3து படத்தில்  கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளனர்.  இதை பார்த்து ரசிகர்கள்  அனைவரும் விநாயகர் சதுர்த்தி இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்களில் அவர்களின் மகள் இல்லை.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web