சில்க் ஸ்மிதாவை போலவே அச்சு அசலாக விஷ்ணு காந்தி பிரியா!!

80களில் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆர்ட்டிஸ்ட்களில் ஒருவர் சில்க் ஸ்மிதா. இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவரின் கிறங்க வைக்கும் பார்வைக்கும், அசரடிக்கும் அழகிலும் மயங்காதவர்களே இல்லை எனலாம். இவருடைய திடீர் தற்கொலை திரையுலகையே கலங்கடித்துவிட்டது. சில்க் ஸ்மிதாவின் கதையை திரைப்படமாக்க முடிவு செய்து மார்க் ஆண்டனியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளியானது.
இதில் நடிகை சில்க் போலவே அச்சு அசலான தோற்றம் கொண்ட நடிகை விஷ்ணு காந்தி பிரியா நடித்துள்ளார். ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் சில்க் ஸ்மிதா மீண்டும் திரையில் வந்து விட்டார் என்றே நினைத்தனர். தனது அறிமுகப்படத்திலேயே ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை விஷ்ணு பிரியா இது குறித்து பேசுகையில் “எனது தோற்றத்தை சில கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் அப்படியே சில்க் ஸ்மிதாவைப் போலவே கொண்டு வந்துள்ளனர்.
தோற்றம் மட்டும் எனக்கும் சில்க் ஸ்மிதாவுக்குமான ஒற்றுமை கிடையாது. இது இல்லாமல் எனக்கும் சில்க்கிற்கும் வேறு சில ஒற்றுமைகளும் உண்டு.சில்க்கின் இறப்பு 1996. என்னுடைய பிறப்பு 1997. எனக்கும் அவருக்கும் சொந்த ஊர் திருப்பதி தான். அவருடைய பிறந்தநாள் டிசம்பர் 3ம் தேதி. என்னுடைய பிறந்தநாள் டிசம்பர் 13ம் தேதி. இப்படி எனக்கும் அவருக்கும் பல ஒற்றுமைகள் உள்ளது. படத்தில் என்னைப் சில்க் ஸ்மிதாவாகப் பார்ப்பதற்கு உங்களைப் போலவே நானும் ஆர்வமாக இருக்கிறேன்” என் ஸ்மிதாவைப் போலவே கண் சிமிட்டுகிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!