விசுவ ஹிந்து பரிஷத் முன்னாள் மாநில துணை தலைவர் ஆர்.பி.வி.எஸ் மணியன் அதிரடி கைது!!

 
மணியன்

விசுவ ஹிந்து பரிஷத் முன்னாள் மாநில துணைத் தலைவரான ஆர்.பி.வி.எஸ். மணியன். இவர் சமீபத்தில் பேசிய கூட்டம் ஒன்றில்  சனாதனத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். அதை குறிப்பிடும் போது  திருவள்ளுவர் அம்பேத்கர் மற்றும் பட்டியலில் மக்கள் குறித்து  அவதூறாக பேசியுள்ளார்.


இந்தப் பேச்சுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன்   குறிப்பிட்ட ஜாதியினரை முஸ்லிமாக மதம் மாறக்கூடாது. அதற்குப் பதிலாக அரிவாளை தூக்கிக்கொண்டு வெட்ட கற்றுக் கொள்ளுங்கள் என பேசியிருந்தார். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

மணியன்


இது சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு எதிராக முற்போக்கு அமைப்புகள் போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்திருந்தன. நேற்று  இரவு அவரை தமிழக போலீஸார் கைது செய்துள்ளனர். இதற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மணியன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் அந்த அமைப்புகள் முடிவு செய்துள்ளன. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web