லோனை கூட கட்ட முடியல... கதறிய விஜே மணிமேகலை !

 
விஜே மணிமேகலை

90ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் தொகுப்பாளர்களில் ஒருவராக விஜே மணிமேகலை இருந்து வருகிறார். 90ஸ்க்கு மட்டுமல்லாமல் இப்போது உள்ள 2கே கிட்ஸ்களுக்கு கூட மணிமேகலை பேவரைட் தொகுப்பாளினி தான். அதுவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவருடைய அல்டிமேட் காமெடி நிகழ்ச்சிக்கு பலர் அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.

அதோடு சமூக வலைதளத்திலும் மணிமேகலை ஆக்டிவாக இருக்கிறார். தன்னுடைய யூடியூப் சேனல் மூலமாகவே தனக்கு விஜய் டிவி தருவதை விட அதிகமான வருமானம் வருகிறது என்று ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றில் மணிமேகலை வெளிப்படையாகவே சொல்லி இருந்தார். இந்த நிலையில் தான் செய்யும் சின்ன சின்ன செயல்களை கூட அடிக்கடி தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டு வருவதை மணிமேகலை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அதுவும் பல போராட்டங்களுக்குப் பிறகு தான் சொந்தமாக கட்டிக் கொண்டிருக்கும் வீடு, அவருடைய உறவினர்களோடு மணிமேகலை செய்யும் காமெடி போன்றவற்றையும் அந்த வீடியோவில் காணலாம். அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பலருடைய மனதை கவர்ந்த மணிமேகலை கடந்த சீசனில் திடீரென்று நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார். அதோடு இனி நான் கோமாளியாக வரமாட்டேன் என்றும் சொல்லியிருந்தார்.

இந்த நிலையில் சில வாரங்கள் கழித்து தொகுப்பாளராக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். ஆனால் இப்போது அதிகமாக விஜய் டிவி நிகழ்ச்சிகளில் மணிமேகலை காண முடியவில்லை. இந்த நிலையில் நேற்று அவர் தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் அது குறித்து மறைமுகமாக சில விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

Manimegalai

அந்த வீடியோவில் எந்த வாய்ப்பும் இல்லாமல் பணக்கஷ்டத்தில் உள்ளதாக கூறியுள்ளார். மேலும், தான் கட்டிவரும் வீட்டின் ஹவுசிங் லோன் கூட கட்ட முடியவில்லை எனவும் சோகமாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web