கப்பலோட்டிய தமிழர்... நாளை தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்த நாள் விழா!
தமிழகத்தில் நாளை கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் 153வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. கல்லூரியில் நடைபெற உள்ளது. தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில், கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், விடுதலைப் போராட்டத் தியாகி, தமிழறிஞர் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்த நாள் விழா நாளை செப்டம்பர் 5ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
விழாவிற்கு வ.உ.சி. பிறந்தநாள் விழாக்குழு தலைவர் பொன் வெங்கடேஷ் தலைமை வகிக்கிறார். துணைத் தலைவர் பே. சங்கரலிங்கம் வரவேற்புரை ஆற்றுகிறார். பியர்ல் ஷிப்பிங் ஏஜென்சீஸ் எட்வின் சாமுவேல் முன்னிலை வகிக்கிறார். வ.உ.சி. கல்விக்கழகம் செயலர், ஏபிசிவி சொக்கலிங்கம் வாழ்த்துரை வழங்குகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் சிறப்புரை ஆற்றுகிறார்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!