தொண்டர்கள் அதிர்ச்சி... முன்னாள் முதல்வர் கொரோனா... பன்றிக் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி!

 
அசோக் கெலாட்

காங்கிரஸ் கட்சியினருக்கு இண்டியா கூட்டணி ஏற்கெனவே சிதறி ஓடிக் கொண்டிருக்கும் அதிர்ச்சியைத் தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட், மருத்துவமனையில் கொரோனா மற்றும் பன்றிக் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி நெருங்கும் நேரத்தில், இந்த செய்தி காங்கிரஸ் தொண்டர்களை மேலும் கவலையடைய செய்துள்ளது. 

காங்கிரஸ் கட்சி தலைவரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் ஜெய்ப்பூர் மருத்துவமனை நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களாகவே கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அசோக் கெலாட், சிகிச்சைக்காக மருத்துவமனையில் நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார்.

அசோக் கெலாட்

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சலும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அசோக் கெலாட் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. காய்ச்சலுடன் அவரது உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து வருவதாலும், தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக நள்ளிரவில் அசோக் கெலாட் வெளியிட்ட பதிவு ஒன்றில், தொடர் காய்ச்சல் காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தார். மேலும் கொரோனா மற்றும் பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், கடந்த தினங்களில் கெலாட் உடன் சந்திப்பு மேற்கொண்டோர் தங்கள் உடல் நலனை பரிசோதித்துக்குக் கொள்ளும்படியும் அவர் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

அசோக் கெலாட் - சச்சின் பைலட்

காங்கிரஸ் மூத்த தலைவரான அசோக் கெலாட் பாஜக நெருக்கடிகளையும் மீறி ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை தொடர்ந்து வந்தார். இந்தி பேசும் வாக்காளர்கள் நிறைந்த மாநிலங்களில் காங்கிரஸ் வசமிருந்த ராஜஸ்தான் மூலம் பாஜவின் எதிர்ப்பு அரசியலை அதிகம் எதிர்கொண்டார். கடந்த சட்டமன்ற தேர்தல் நெருக்கத்தில் அவரது மகன் மீது மத்திய விசாரணை அமைப்புகள் பல சுற்று நெருக்கடிகளை விடுத்தன.

சட்டப்பேரவை தேர்தல் முடிவில், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் வரிசையில் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. இதற்கு பாஜகவின் ஆதிக்கம் மட்டுமன்றி, மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட் உடனான மோதலும் முக்கிய காரணமானது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web