வாக்காளர் பட்டியலில் உங்க பேர் இருக்கா? எப்படி செக் செய்யலாம்?

 
வாக்காளர் பட்டியல்

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகள் இரண்டாம் கட்டமாக தொடங்கவுள்ள நிலையில், தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளதாக தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் அறிவித்துள்ளார். இதற்கான முன்னேற்பாடாக, இன்று (அக்.28) நள்ளிரவு 12 மணி முதல் அந்த மாநிலங்களின் தற்போதைய வாக்காளர் பட்டியல் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல்

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை ஆன்லைனில் எளிதாக தெரிந்து கொள்ளலாம். இதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்துக்குச் சென்று “Search in Electoral Roll” என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் EPIC எண், தனிப்பட்ட விவரங்கள் அல்லது மொபைல் எண் மூலம் தேடலாம். மொபைல் ஆப்ஷனைத் தேர்வு செய்தால், வாக்காளர் அட்டையில் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு வரும் ஓடிபி மூலம் உடனே விவரங்களைப் பெற முடியும்.

தமிழக வாக்காளர் பட்டியலில் இந்தி மொழியில் அச்சான பெயர்கள்!! சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம்!!

தமிழகத்தில் கடைசியாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் 2025 ஜனவரி 6-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. அதன்படி, மாநிலத்தில் மொத்தம் 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 27 பேர் ஆண்கள், 3 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரத்து 803 பேர் பெண்கள் மற்றும் 9,120 பேர் மூன்றாம் பாலினத்தினர் ஆவர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!