வாக்களிக்கும் வயது 18லிருந்து 16 ஆகக் குறைப்பு... நேபாளம் இடைக்கால பிரதமர் அறிவிப்பு.!
நேபாளத்தின் இடைக்காலப் பிரதமர் சுஷிலா கார்க்கி. இவர் வாக்களிக்கும் வயது 18-லிருந்து 16 ஆகக் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். நேபாளத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க நாடாளுமன்றத் தேர்தலில் இளம் வாக்காளர்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த முடிவு, ஜெனரல்-இசட் தலைமுறையினரின் போராட்டங்களைத் தொடர்ந்து, அரசியலில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் எடுக்கப்பட்டது. சுஷிலா கார்க்கி, நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி உரையில், இளைஞர்களின் வாக்குரிமையை விரிவுபடுத்துவதன் மூலம் அவர்களின் அரசியல் ஈடுபாட்டை அதிகரிக்க இந்த நடவடிக்கை உதவும் எனத் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் வசிக்கும் நேபாள குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காக சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

வெளிநாட்டில் வசிக்கும் நேபாள குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காக அரசாங்கம் எதிர்காலத்தில் சட்டத்தில் திருத்தம் செய்யும் என உறுதியளித்தார். குறிப்பாக, ஜெனரல் இசட் போராட்டங்களின் போது மாணவர்கள் உட்பட 74 பேர் கொல்லப்பட்டதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷிலா கார்க்கி உறுதி அளித்துள்ளார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
