சர்வதேச அளவில் போர்.. பெருந்தொற்று அபாயம்... பில்கேட்ஸ் எச்சரிக்கை!

 
பில்கேட்ஸ்
 

சர்வதேச அளவில் போர் மற்றும் பெருந்தொற்று ஏற்படக்கூடும் என்று மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக பேசிய அவர், “இன்றைய உலகில் சில இடங்களில் ஏற்பட்டுள்ள பதற்றமானது மற்றொரு பெரிய போருக்கு வழிவகுக்கக்கூடும். 

பில்கேட்ஸ்

ஒரு வேளை இதனை நாம் தவிர்க்க முயன்றாலும், மற்றொரு பெருந்தொற்று ஏற்படலாம். இது, அடுத்த 25 ஆண்டுகளில் ஏற்படக்கூடும். உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கோவிட் நிறைய பாடங்களை நமக்கு கற்றுக் கொடுத்தாலும், அது நாம் எதிர்பார்த்ததை விடக்குறைவு.

பில்கேட்ஸ்

எதில் நாள் அதிகம் கற்றுக் கொண்டோம். எங்கு பிரச்சனை உள்ளது என்பதை நமது செயல்பாடுகள் முழுமையாக பிரதிபலிக்கவில்லை. ஒரு வேளை அடுத்த 5 ஆண்டுகளில் இது மேம்படும். ஆனால், இதுவரை அது இல்லாதது ஆச்சர்யம் அளிக்கிறது. உலகத்தை வழிநடத்தும் மற்றும் முன்மாதிரியாக இருக்கும் என அமெரிக்கா மீது எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அதற்கேற்ப அந்நாடு செயல்படவில்லை” என்று கூறினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை