வினோதம்... கோழி குத்தி செய்வினை வைக்கப்படும்.. திருடர்களுக்கு எச்சரிக்கை பேனர்!!

 
செய்வினை

தொழில் நுப்ட வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் இன்னும் பல கிராமங்களில் செய்வினை, நேர்ந்து விடுதல் என பல மூடப்பழக்க வழக்கங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. வீட்டில் நகை, பணம் திருட்டு போனால் போலீசில் புகார் செய்வது தான் வழக்கம். ஆனால் அதை போஸ்டர் அடித்து ஒட்டி எடுத்தவர்கள் தரவில்லை எனில் செய்வினை வைத்து விடுவோம். அவர்கள் குடும்பம் உருப்படாது என சகட்டுமேனிக்கு எழுதியுள்ளனர்

கோழி குத்தி

.இந்த விநோத சம்பவம் ஈரோட்டில் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோவில் பகுதியில் வசித்து வருபவர்   ராமசாமி. இவர் செப்டம்பர்   15ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். வீட்டினை பூட்டி சாவியை வெளியிலேயே ஒரு இடத்தில் மறைவாக வைத்துவிட்டார். இதனை கவனித்த யாரோ மர்ம நபர்  ராமசாமி சென்றதும் வீட்டினுள் புகுந்து நகை பணத்தை திருடியுள்ளனர். 
 
இதில் வீட்டினுள் இருந்த 18 பவுன் நகைகள் மற்றும் ரூ3000 ரொக்கப்பணத்தையும் திருடியுள்ளனர்.   வெளியூர் சென்ற ராமசாமி திரும்பி வந்த பார்த்தபோது நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து  உடனடியாக போலீசில்   புகார் அளித்தார். எனினும் இதுவரை நகைகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் ராமசாமி  தான் வசித்து வரும் தெரு முனையில் ஒரு பேனரை வைத்துள்ளார்.

கொள்ளை திருட்டு

இந்த பேனரில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமசாமி வீட்டில் நகைகள் திருடுபோய் உள்ளது. வெள்ளாங்கோவிலில் வசித்து வரும் யாரும்  நகைகளை எடுத்திருந்தால் திருப்பி வைத்து விடுங்கள், இல்லை என்றால் கோவிலில் கோழி குத்தி செய்வினை வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   இதனால் எடுத்தவர்கள் குடும்பமே பாதிக்கப்படும். எனவே நகைகளை வைத்து விடுங்கள், என எழுதப்பட்டுள்ளது. திருடு போன நகைகளை மீட்க செய்வினை வைக்கப்படும் என வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web