கரையோர மக்களுக்கு எச்சரிக்கை... கொசஸ்தலை, அடையாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு... !!

 
நாளை நள்ளிரவுக்குள் பூண்டி அணைக்கு மேலும் 1000 கனஅடி தண்ணீர்

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது.இதனால் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட ஏரிகள் நிரம்பி வழிகின்றன. உபரி நீர் திறக்கப்பட்டு வருகின்றன. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை மற்றும் அடையாறு ஆறுகளின் கரையோர  மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி


அதே நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில்  பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கம் 3,458 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கும் தொடர் கனமழையால் நீர்வரத்து தற்போது 40 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்தேக்கத்தின் மொத்த உயரமான 35 அடியில், தற்போது 34 அடியாகவும், மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 2,976 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.  

செம்பரம்பாக்கம் ஏரி

மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவின் பேரில் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை 45,000 கன அடி உபரி நீரானது கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.  இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில், 22.8 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது. நீர்வரத்து 8000 கன அடியாக உள்ளதால், ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 4000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மழை தொடரும் பட்சத்தில் இந்த நீர் திறப்பு மேலும் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web