பிரான்ஸ் அதிபரின் மனைவி ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவரா? பரபரப்பு தகவல்!

 
பிரான்ஸ்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேலின் மனைவி பிரிஜிட், ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரான்ஸ் அதிபரின் மனைவி ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர் என்று அமெரிக்க வலதுசாரி அரசியல் விமர்சகர் குற்றம் சாட்டியுள்ளார். 

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் (47) பள்ளிப்பருவ ஆசிரியர் பிரிஜிட் (72). அவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருந்த நிலையில், மேக்ரானுக்கும், அவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் கணவரை பிரிந்த அவர் 2007ம் ஆண்டு மேக்ரானை மணந்தார். அவர்களது திருமணத்துக்கு அப்போதே கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

தடுப்பூசியை அதிகரிக்க பிரான்ஸ் அதிபர் சூப்பர் திட்டம்! நீண்ட வரிசையில் பொதுமக்கள்!

எதிர்ப்புகளைக் கண்டு கொள்ளாமல் இருவரும் தங்களது வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். ஆனால் சமீபத்தில் பிரிஜிட் ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர் என்று அமெரிக்க வலதுசாரி அரசியல் விமர்சகரான கேண்டஸ் ஓவன்ஸ் குற்றம் சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிஜிட் அமெரிக்க கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் முகத்தில் பளார் விட்ட மனைவி? இம்மானுவேல் மாக்ரோன் விளக்கம்!

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கர்ப்பமாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் தான் ஒரு பெண் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்களை கோர்ட்டில் அவர் தாக்கல் செய்ய உள்ளார். இதற்கு முன்னரும் இதே போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது கோர்ட்டில் வழக்கு தொடுத்து பிரிஜிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?