தேர்தல் அட்ராசிட்டிகள்... இந்தியாவில் பொது இடங்களில் வாஷிங் மெஷின்!

 
வாஷிங்மெஷின்

இந்தியாவில் வெகுவிரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு, அரசியல் வியூகம், தேர்தல் பிரச்சாரம் என அரசியல் கட்சிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இந்தியாவில் தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கிடுச்சு. இனி வாக்காளர்களின் காதுகளில் மட்டுமல்லாமல் காதுக்குள்ளேயும் பூவை வைக்க வேட்பாளர்கள் தயாராகி வருகை தர உள்ளனர். ரோட்டோர கடைகளில் பரோட்டோ போடுவது, ஆற்றங்கரை ஓரத்தில் துணி துவைக்க உதவுவது, ஓலை குடிசைக்குள் நுழைந்து பழைய சோறு சாப்பிடுவது எல்லாம் பழைய பேஷனாகி போய்விட்டது. மாதந்தோறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இவ்வளவு பணம் என்கிற ரீதியில் அறிக்கைகள் வெளியானாலும் ஆச்சர்யமில்லை.

வாஷிங் மெஷின்

விஷயம் இது கிடையாது. சீனா, இந்தோனேஷியா நாடுகளில் உள்ளதை போன்று, பெண்களின் வசதிக்காக பொது இடங்களில் வாஷிங் மெஷின் பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கர்நாடக ராம்நகர் காங்கிரஸ் – எம்.எல்.ஏ., இக்பால் ஹுசேன் தெரிவித்துள்ளார்.தொகுதி மக்களுக்கு எந்த வகையிலும் சேவை செய்யலாம். அனைவரின் ஒத்துழைப்பைப் பெற்று, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வோம். 25 ஆண்டுகளாக நடத்தப்படாத பணிகளை, இப்போது நடத்துவது எனக்கு சவாலாக உள்ளது. அடிப்படை வசதிகள், குடிநீர் வழங்குவது, ஆற்றங்கரையில் பூங்கா அமைப்பது, மாவட்ட விளையாட்டு அரங்கம் சீரமைப்பு உட்பட, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குடியிருப்பு இல்லாத மக்களுக்கு, 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டித்தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று பேசிக் கொண்டிருந்தவர், பெண்கள், துணி துவைக்க ஆற்றங்கரை அல்லது ஏரிக்குச் செல்கிறார்கள்.

தேர்தல்

இவர்களுடன் சிறு குழந்தைகளும் செல்கின்றன. பல இடங்களில் துணி துவைக்க சென்று, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே பெண்களின் வசதிக்காக, பொது இடங்களில் வாஷிங் மெஷின்கள் பொருத்த திட்டம் வகுத்துள்ளோம் என்று அறிவித்தார்.ராம்நகரின் இரண்டு வார்டுகளில், சோதனை முறையில் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். ஹைஜூரு சதுக்கம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், 10 வாஷிங் மெஷின்கள் பொருத்த இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சீனா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில், இத்தகைய திட்டம் அமலில் உள்ளது. இதே திட்டம் ராம்நகருக்கு கொண்டு வரப்படும். இது, பெண்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறினார். என்ன வாக்காளர்களே... இப்போ முதல் பாராவை மீண்டும் படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web