கேரள பள்ளிகளில் ‘வாட்டர் பெல்' முறை... தமிழக பள்ளிகளில் கவனிப்பாரா அமைச்சர் அன்பில் மகேஷ்!?

 
வாட்டர் பெல்

 

‘ஷ்...ப்பா... வெயில் கொளுத்துது’ என்று உள்ளுக்குள் புலம்பினாலும் பலரும் அலுவலகங்களில் மின்விசிறி கீழோ, ஏஸி அறையிலோ தான் பணி செய்கிறோம். பெரியவர்களான நாம், வெயிலின் உஷ்ணத்திற்கு பழகி அல்லது வேறு வழி கண்டுபிடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்கிறோம். 
ஆனால், சின்னஞ்சிறிய மழலைகள் இது வெயில் கொடுமை என்று கூட சொல்லத் தெரியாமல், காலை வீட்டிலிருந்து கொண்டு செல்லும் வாட்டர் பாட்டில்களில் நிரப்பப்பட்ட தண்ணீரில் பாதிக்கும் மேல் மாலை வீடு திரும்புகையில் கொண்டு வருகின்றன. இது குறித்து தமிழக பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவலைப்படுவதில்லை. நம் கவனம் முழுவதும் முழு புத்தகத்தையும் குழந்தைகளின் மூளையில் திணிப்பதிலேயே குவிந்திருக்கிறது.

வாட்டர் பெல்

தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிகளில் நல்ல காற்றோட்டம் கூட கிடையாது. 40, 50 பிள்ளைகளுக்கு இரு மின்விசிறிகள் அல்லது அதுவும் இல்லாத நிலைமையில் தான் வகுப்பறைகள் உள்ளன. தனியார் பள்ளிக்கூடங்களின் நிலைமையே இப்படியெனில் அரசு பள்ளிகளில் நிலைமை இன்னும் மோசம்.
இந்நிலையில், கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் முதல் மாநில அரசாக வெப்ப அலைகளின் பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காப்பதற்காக, மாணவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் தினந்தோறும் அனைத்து பள்ளிகளிலும்  'வாட்டர்-பெல்' முறையை செயல்படுத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
கேரள பொதுக் கல்வித் துறை வட்டார தகவலின்படி, "பள்ளி நேரங்களில் குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்வது அவசியம். அதனால் இம்மாதம் 20ம் தேதி முதல் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து பள்ளிகளிலும் காலை 10.30 மணி, பிற்பகல் 2.30 மணிக்கு இரண்டு முறை மணி ஒலிக்கப்படும். அப்போது குழந்தைகள் சென்று நீர் அருந்தி வர வேண்டும். குழந்தைகளிடையே நீரிழப்பு மற்றும் பிற சுகாதார பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும்” என்று அறிவுறுத்தியுள்ளது. 

வாட்டர் பெல்


கலைஞரின் பெயரிலோ, முதல்வர் ஸ்டாலினின் பெயரிலோ, அமைச்சர் உதயநிதியின் பெயரிலோ யார் பெயரிலாவது பள்ளிகளில் தினந்தோறும் மாணவர்கள் மூன்றுக்கும் மேற்பட்ட முறை தண்ணீர் அருந்துவதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதிசெய்ய அறிவுறுத்துவாரா என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. செய்வாரா அமைச்சர்?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web