ஒகேனக்கல்லில் நீர்வரத்து 13,000 கனஅடியாக அதிகரிப்பு.. குவியும் சுற்றுலா பயணிகள்!

 
ஒகேனக்கல்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 9,000 கனஅடியில் இருந்து 13,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா் வறுத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

ஒகேனக்கல்

இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 9,000 கனஅடியில் இருந்து 13,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

இன்று காலை 6 மணிக்கு 9,000 கன அடியாக இருந்த நீர்வரத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அதிகரித்துள்ள நிலையில், 13,000 அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

ஒகேனக்கல் காவிரி

இதனிடையே ஒகேனக்கல்லுக்கு வார விடுமுறை மற்றும் தொடா் விடுமுறை நாள்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். 

தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டுத் தோ்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று 20,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web