நீர் தேர்வு அதிர்ச்சி... 15 நாட்களில் 3வது மரணம்... சென்னை எஸ்ஆர்எம் மாணவர் ராஜஸ்தானில் தற்கொலை!

 
நீட் தற்கொலை

கடந்த 15 நாட்களில் நீட் நுழைவு தேர்வுகளுக்கு தயார்படுத்தும் ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில், 3வது தற்கொலை சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது. கோட்டா நகரில் நீர் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், அடுத்தடுத்து தற்கொலைச் செய்து கொள்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர், நேற்று ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் த் தற்கொலை செய்து கொண்டார். 

மாணவரை பாதிக்கும் நுழைவுத் தேர்வு அழுத்தம்

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நூர் முகமது எனும் மாணவர், சென்னை எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் பிடெக் படித்து வருகிறார்.  இவர் ராஜஸ்தானின் கோட்டா நகரில் தங்கியிருந்து  பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு வந்த நிலையில், நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 2 வாரங்களில் 3வது தற்கொலை சம்பவமாக இது பதிவாகியிருப்பதாக கோட்டா போலீசார் தெரிவிக்கின்றனர். முன்னதாக 18 வயதான நிஹாரிகா சிங் தனது ஜேஇஇ படிப்பின் சுமை தாங்காது, ஜன.29 அன்று தற்கொலை செய்து கொண்டார். அதே போன்று 19 வயதான முகமது ஜைத் என்ற மாணவர், நீட் தேர்வு பயிற்சிக்கு மத்தியில் ஜன.23 அன்று, தற்கொலை செய்து கொண்டார். இவர்களின் தொடர்ச்சியாக சென்னை கல்லூரி மாணவர் தற்கொலையும் சேர்ந்திருக்கிறது.

தற்கொலையில் தள்ளும் பாடங்களின் அழுத்தம்

கோட்டாவில் கடந்தாண்டு சுமார் 30 மாணவ மாணவியர், நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு நெருக்கடிகளை தாங்காது தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முன்னதாக 2022-ல் 15 மாணவர்களும், 2019-ல் 18, 2018-ல் 20, 2017-ல் 7, 2016-ல் 17 மற்றும் 2015-ல் 18 என ஆண்டுதோறும் நுழைவுத்தேர்வு அழுத்தங்களால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் அங்கே பதிவாகி வருகிறது. இவற்றில் அதிகபட்சமான தற்கொலைகள் கடந்தாண்டில்(2023) பதிவாகி உள்ளன.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web