வயநாடு நிலச்சரிவு: நடிகர் தனுஷ் ரூ.25 லட்சம் நிதியுதவி!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 170க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில், 9வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த பகுதியில் இருந்த 500க்கும் மேற்பட்ட வீடுகள், வீடுகள் இருந்த சுவடே தெரியாமல் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இந்நிலையில், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு பல மாநிலங்களைச் சேர்ந்த பிரபலங்களும், திரையுலக நட்சத்திரங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர். லூலூ நிறுவனர், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனர் ரூ.5 கோடி வழங்கியுள்ளனர். நடிகர்களில் விக்ரம் ரூ.20 லட்சம், நடிகர் சூர்யா-ஜோதிகா-கார்த்தி-சிவக்குமார் ரூ.50 லட்சம் கொடுத்துள்ளனர். நயன்தாரா - விக்னேஷ் சிவன் ரூ.20 லட்சமும் வழங்கியுள்ளனர்.

தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் அதிகளவில் நிதியுதவி செய்து வருகின்றனர். நடிகர் பிரபாஸ் ரூ.2 கோடி நிதியுதவி அளித்துள்ளார். நடிகர் மோகன்லால் ரூ.3 கோடியும், நஸ்ரியா - ஃபகத்பாசில் ரூ 25 லட்சமும் நிதியுதவி அளித்தனர். நடிகர்கள் சிரஞ்சீவி - ராம்சரண் இணைந்து ரூ. 1 கோடியும், நடிகர் அல்லு அர்ஜுன் ரூ. 25 லட்சம் வழங்கினர். தற்போது நடிகர் தனுஷ் வயநாடு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
