வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 344 ஆக உயர்வு... 300 பேரை காணவில்லை!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவால் புரட்டிப் போடப்பட்ட நிலையில், 5வது நாளான இன்று சனிக்கிழமை, மீட்புக் குழுக்கள், மேம்பட்ட தொழில்நுட்ப கருவிகள் மற்றும் மோப்ப நாய்களைப் பயன்படுத்தி, உயிர் பிழைத்தவர்களைத் தொடர்ந்து தேடும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

வயநாடு நிலச்சரிவின் இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்ட உடல்களை மீட்டெடுக்கும் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டு வரப்படுகின்றன .வயநாட்டில் சூரல்மலை மற்றும் முண்டக்காய் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கனமழை எச்சரிக்கை கிடைத்தது.

அதன் பிறகும், சாலியாற்றின் கரையில் வசிப்பவர்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதில் மாவட்ட நிர்வாகம் தவறி விட்டதாக தெரிய வந்துள்ளது. நூற்றுக்கணக்கான குடும்பங்களை நிவாரண முகாம்களுக்கு மாற்ற அதிகாரிகள் தவறியதாக தகவல் வெளியாகியுள்ளது
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
