”நாங்க BULLY GANG”.. ரொம்ப பெருமையா பதிவிட்ட நிக்சன்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

 
நிக்சன்

பிக்பாஸ் 7வது சீசன் கடந்த மாதம் நிறைவடைந்தது. நிகழ்ச்சி முடிந்துவிட்டாலும் போட்டியாளர்கள் இடையே போட்டி நீடித்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து சமீபத்தில் விஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விசித்ரா, தினேஷுடன் ஏற்பட்ட மோதலால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் அதிக சர்ச்சைகளில் சிக்கிய மாயா, பூர்ணிமா ஆகியோர் நிகழ்ச்சி முடிந்து ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், இன்னும் எந்தவித பேட்டியும் கொடுக்காமல் இருந்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்கும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் ஏ டீம், பி டீம் என தனித்தனியாக பிரிந்து அவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் நேற்று பிக்பாஸ் பி டீமின் விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், டைட்டில் வின்னர் அர்ச்சனா, ஆர்ஜே பிராவோ ஆகியோர் வீடியோ கால் மூலம் ஒன்றாக பேசினர். அதன் ஸ்கிரீன் ஷாட்டை பிராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பிக்பாஸ் ஏ டீம் அதற்கு போட்டியாக தங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.article_image2

இதன்படி மாயா, பூர்ணிமா, அக்ஷயா, சரவண விக்ரம், அனன்யா ஆகியோரை சந்தித்த புகைப்படங்களை நிக்சன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு புல்லி கேங் என பெருமையுடன் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, அவர்களை விமர்சித்து வந்த அனைத்து கருத்துகளையும் ஒவ்வொன்றாக நீக்கிய நிக்சன், தனக்கு ஆதரவாக வந்த கருத்துக்களை மட்டும் சேர்த்துள்ளார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web