மத்திய அரசிடம் ரூ.5,000 கோடி கேட்போம்... 4 மாவட்ட மழை பாதிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

 
ஸ்டாலின்

சென்னையை புரட்டிப் போட்டு கடந்து சென்றிருக்கிறது மிக்ஜாம் புயல். சென்னை மட்டுமல்லாமல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மழை பாதிப்பு குறித்து பேட்டியளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மழை பாதிப்பு குறித்து நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ.5,000 கோடி கேட்போம் என்று பேட்டியளித்தார்.

அதே சமயம், தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த காலங்களை விட இந்த முறை மழை பாதிப்பு குறைவாக இருந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களுடன் ஆய்வு

இன்று மழை பாதிப்பு பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2015-ல் ஏற்பட்டது செயற்கை வெள்ளம் என தெரிவித்தார். இம்முறை சென்னை எதிர்கொண்டது இயற்கை வெள்ளம். இருந்தாலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை விட இம்முறை சென்னையில் பாதிப்பு குறைவாகவே ஏற்பட்டுள்ளது என்றார்.

தமிழக அரசு, ரூ.4,000 செலவில் சென்னையில் மேற்கொண்ட பணிகளால் தான் மழை பாதிப்பு குறைந்துள்ளது என்று தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், 2015 பெருமழையின் போது, 119 பேர் பலியான நிலையில் இம்முறை 7 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மிக்ஜாக் புயல் மற்றும் கனமழை பாதித்த ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 61,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், 11 லட்சம் உணவு பாக்கெட்டுகள், ஒரு லட்சம் பால் பாக்கெட்டுகள் நிவாரண முகாம்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் முதல்வர் தெரிவித்தார். சென்னையில் மழை பாதிப்பு  நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் 5000 கோடி கேட்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web