இந்தியா சீனா வர்த்தக உறவை வலுப்படுத்துவோம்... சீன தூதர் அழைப்பு!

 
இந்தியா சீனா இந்தியா சீனா

இந்தியா மற்றும் சீனா இடையேயான தூதரக உறவுகள்  75 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 76வது ஆண்டு விழா டெல்லியில் கோலாகலமாக  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இந்தியாவின்  சீன தூதர் ஸு ஃபெய்ஹாங், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய கருத்துக்கள் குறித்து உரை நிகழ்த்தினார். அந்த உரையில்  'சீனா மற்றும் இந்தியா இடையேயான தூதரக உறவுகள் நிறுவப்பட்டு இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 75 ஆண்டுகளில், உறவில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும், நட்புறவே பிரதானமாக இருந்து வந்துள்ளது.  

ஜி ஜின்பிங்
சமீபத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நடத்திய சந்திப்பு, சீன-இந்திய உறவுகளை புதிய கட்டத்தை எட்டியுள்ளது.  இரு தலைவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்திய தரப்புடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம்.  எல்லைப் பிரச்சனை அடிப்படையாக வைத்து தற்போதைய சீன-இந்திய உறவுகளை வரையறுக்க அனுமதிக்கக் கூடாது.

ஜி ஜின்பிங்

குறிப்பிட்ட வேறுபாடுகள் இருதரப்பு ஒத்துழைப்பை பாதிக்கக் கூடாது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, இருதரப்பு வர்த்தகம் 10.4% அதிகரித்து 102 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. திபெத்தில் உள்ள புனித மலை மற்றும் ஏரிக்கு இந்திய யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்வதை சீனா மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி வரை, 2,65,000க்கும்  மேற்பட்ட விசாக்கள் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன' எனக் கூறியுள்ளார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?